மின்வாரிய ஊழியர் என கூறி வீட்டிற்குள் நுழைந்த நபர்... மர்ம ஆசாமியை தைரியமாக சிறைப்பிடித்த பெண்
முளகுமூட்டைச் சேர்ந்த ஜெமிலா வீட்டில் தனியாக இருந்த போது, தன்னை மின்வாரிய ஊழியர் என கூறிக் கொண்டு வீட்டிற்கு வந்த இளைஞர், மின் மீட்டரை சோதனையிட வேண்டும் என கூறியுள்ளார்... அதை நம்பாமல், சுதாரித்துக் கொண்டு ஜெமிலா அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கேட்டுள்ளார்... ஆனால் அந்த மர்ம ஆசாமியோ திருதிருவென விழித்து முன்னுக்குப் பின் முரணாக பேச, சந்தேகம் அடைந்த ஜெமிலா வீட்டின் முன்புற கதவைப் பூட்டி விட்டு அந்த மர்ம நபரை சிறைப்பிடித்து தன் கணவருக்கு உடனடியாக செல்போனில் அழைத்துத் தகவல் தெரிவித்துள்ளார்... ஆனால் இந்த இடைவெளியில் அந்த நபர் சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்று விட்டார்... இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் யார்? திருடனா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மர்ம நபர் சுவரேறி குதித்துத் தப்பிச் செல்லும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.