நடுவானில் விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட பயணி

Update: 2022-09-20 03:00 GMT

நடுவானில் விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட பயணியை பாகிஸ்தான், விமான நிறுவனம் கருப்பு பட்டியலில் வைத்து உள்ளது.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இருந்து துபாய் நோக்கி பி.கே.-283 ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென்று பயணி ஒருவர் எழுந்து விமான ஊழியர்களிடம் மோதலில் ஈடுபட்டார்.

இதன்பின்னர், விமானத்தில் காலை நீட்டி குப்புற படுத்தும், இருக்கைகளை கைகளால் குத்தியும், விமான ஜன்னலை சேதப்படுத்தும் நோக்கில், கால்களால் கடுமையாக உதைத்து உள்ளார்.

அந்த பயணியின் விரும்பத்தகாத சம்பவங்கள், சக பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையடுத்து, ஒரு வழியாக விமானம் துபாய் சென்று சேர்ந்த நிலையில், விமான நிலைய அதிகாரிகள் ரகளையில் ஈடுபட்ட பயணியை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், சம்பந்தப்பட்ட பயணியை பாகிஸ்தான் விமான நிறுவனம் கருப்பு பட்டியலில் வைத்து உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்