திடீரென வீட்டில் இருந்து மாயமான இளைஞர்.. கொலை செய்து வனப்பகுதியில் புதைப்பு - நண்பரகளே செய்த பகீர் சம்பவம்

Update: 2023-03-26 14:43 GMT

கள்ளக்குறிச்சி அருகே, காணாமல் போன ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் 19 வயது மகன், வனப்பகுதியில் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சிமன்ற துணைத் தலைவர் ஜெய்சங்கர் என்பவரின் 19 வயது மகன் ஜெகன்ஸ்ரீ, கடந்த 25ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். இதுதொடர்பான புகாரின் பேரில், ஜெகன்ஸ்ரீயின் செல்போன் எண்ணை வைத்து, கடைசியாக அவரை தொடர்பு கொண்டவர்களின் பட்டியலை போலீசார் திரட்டினர். அதில், ஜெகன் ஸ்ரீயின் நண்பனான ஐயப்பன் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 4 பேர், கடைசியாக கூத்தக்குடி வனப்பகுதியில் ஒன்றாக இருந்தது செல்போன் சிக்னல் மூலம் கண்டறியப்பட்டது. அந்த 4 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ஜெகன் ஸ்ரீக்கும், ஐயப்பனுக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாகவும் அதன் காரணமாக ஐயப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் நட்பாக பேசி, ஜெகன்ஸ்ரீயை வனப்பகுதிக்கு வரவழைத்து மதுகொடுத்துள்ளனர். ஜெகன்ஸ்ரீக்கு போதை தலைக்கேறியபோது, அவரை பீர் மற்றும் பிராந்தி பாட்டில்களால் சரமாரியாக குத்திக் கொலை செய்ததாகவும், பின்னர் வனப்பகுதியிலேயே குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்