ஆடு மேய்க்க சென்றவருக்கு நேர்ந்த அதிர்ச்சி - மலைப்பகுதியில் கிடந்த மனித எலும்புகூடு | Kanyakumari

Update: 2022-12-03 16:46 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 மாதங்களுக்கு முன் மாயமான முதியவர் ஒருவர் எலும்பு கூடாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரணியல் அருகே மாம்பழத்துறையாறு அணை மலைப்பகுதியில் மேய்ச்சலுக்காக ஆடுகளை அழைத்து சென்ற நபர் ஒருவர் பாறை இடுக்கில் கிடந்த மனித எழும்பு கூட்டினை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், எலும்பு கூட்டினை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், 30 நாட்களுக்கு முன்பு காணாமல் போன முதியவர் கிருஷ்ணன்குட்டி என்பது தெரியவந்துள்ளது.

முதியவர் அணிந்திருந்த ஆடையும், எலும்புக்கூட்டில் காலில் ஏற்பட்டிருந்த முறிவையும் வைத்து போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தின் பிண்ணனி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்