ஓடும் பேருந்தில் தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்ட நபர் - பீதியில் அலறிய பயணிகள்
ஓடும் பேருந்தில் தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்ட நபர் - பீதியில் அலறிய பயணிகள்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ஓடும் பேருந்தில் தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்ட நபரால், பயணிகள் பீதி அடைந்தனர். பாலக்கோடு முத்துகவுண்டன் தெருவை சேர்ந்த அருண்குமார் என்பவர், ஓசூரில் இருந்து பாலக்கோட்டிற்கு அரசுப் பேருந்தில் வந்து கொண்டிருந்தார். வெள்ளி சந்தை அருகே வரும் போது, ஆவி கொல்லப் பார்ப்பதாக கத்திக்கொண்டே, கத்தரிக்கோலால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார். இதனால் பயணிகள் அலறியடித்து கத்த ஆரம்பித்தனர். உடனே அருண்குமாரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.