திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த சிற்பி ஒருவர் விழிப்புணர்வுக்காக ஒரே கருங்கல்லில் 8 கிலோ எடை கொண்ட ஹெல்மெட்டை உருவாக்கியுள்ளார். அவிநாசியில் சிற்பக்கலைக்கூடம் நடத்தி வரும் சரவணன் இந்த ஹெல்மெட்டை உருவாக்கிய நிலையில், இளைஞர்கள் பலர் போக்குவரத்து விதிகளை மீறி, ஹெல்மெட் அணியாமல் சென்று தங்களது உயிரை இழந்து விடுவதாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஒரே கருங்கல்லில் ஹெல்மெட் உருவாக்கியதாகவும் சிற்பி சரவணன் தெரிவித்தார்.