கோவிலுக்குள் புகுந்து உண்டியலை தூக்கிய திருடன் அடித்தே கொன்ற காவலாளி - அதிர்ச்சி சம்பவம்

Update: 2023-02-22 16:06 GMT
  • தெலங்கானாவில் உள்ள கோயிலுக்கு திருடச் சென்ற கொள்ளையனை காவலாளியே அடித்துக் கொலை செய்ததில் போலீசார் அவரை கைது செய்தனர்.

  • ஹைதராபாத் குஷைகுடாவில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா சுவாமி கோயிலில் கொள்ளையடிக்க திட்டமிட்ட கொள்ளையன் இரவில் கோயிலின் உள்ளே நுழைந்துள்ளார்.
  • உண்டியல் மற்றும் சுவாமி சிலையில் இருந்த பொருட்களை எல்லாம் அவர் திருட முயன்ற போது கோயில் காவலாளியான ரங்கய்யா அதை பார்த்துள்ளார்.
  • உடனே அவர்கள் இருவருக்கும் கைகலப்பு ஏற்படவே, தான் வைத்திருந்த தடியால் கொள்ளையனை ரங்கய்யா தாக்கியதாக கூறப்படுகிறது.
  • இதில் தலையில் பலத்த காயமடைந்த கொள்ளையன் கோயில் வளாகத்திலேயே உயிரிழந்தார். இதன்பேரில் கோயில் காவலாளியான ரங்கய்யாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்