ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பட்டதாரி, மன உளைச்சலில் கிணற்றில் குதித்து தற்கொலை

Update: 2022-12-29 17:03 GMT

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பட்டதாரி இளைஞர், மன உளைச்சலில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டன்சத்திரம் அருகே கூத்தம்பூண்டி பகுதியை சேர்ந்த அருண்குமார் என்ற பட்டதாரி இளைஞர், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பறிகொடுத்ததாக கூறப்படுகிறது. பணத்தை இழந்த சோகத்தில் இருந்த அருண்குமார், கடந்த 22ம் தேதி வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். பின்னர் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞரை தேடி வந்துள்ளனர். இந்த நிலையில், அதே பகுதியில் உள்ள கிணற்றில், அருண்குமாரின் உடல் மிதந்ததைக் கண்ட பொதுமக்கள், போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து, மனவேதனையில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்