மெக்கா புனித பயணம் செல்பவர்களுக்கு ஓர் நற்செய்தி..!
இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சவூதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள புனித இல்லமான காபாவைத் தொடுவதற்கும், ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவதற்கும் இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக, காபாவைத் தொடுவதற்கும், ஹஜரல் அஸ்வத் கல்லை முத்தமிடவும் தடை விதிக்கப்பட்டு, அந்தப் பகுதிகள் தடுப்புகள் வைத்து மூடப்பட்டிருந்தன. தற்போது தடுப்புகள் அகற்றப்பட்டு, புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.