கொண்டாட்டமான Finland-க்கு ஜாலி பயணம்... பொழுது போக்கில் சிகரம் தொடும் Finland...

Update: 2023-07-23 05:33 GMT

வட ஐரோப்பா கண்டத்துல இருக்க இந்த நாட்டுல மொத்தம் 5.6 மில்லியன் மக்கள் வாழுறாங்களாம்... என்ன தான் மக்கள் தொகை அதிகமா இருந்தாலும்... சண்டை , சச்சரவு, விபத்து, வறுமை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாம... உலகத்துலயே ரொம்ப சந்தோஷமான மனிதர்கள் இருக்குறது இங்க தான்னு... நம்ம Finland நாட்டுக்கு மாஸா ஒரு அவார்டு குடுத்துருக்காங்க...

இதுமட்டுமில்லாம... ஒவ்வொரு நாளும் டெக்னாலஜி வளர்ச்சி அடைஞ்சாலும்... காடுகளையும் ஏரிகளையும் அழிக்காம பத்திரமா பாதுகாக்குறதால தான்… இன்னமும் இயற்கை சூழ்ந்த நாடா இருக்கு finland… சரி ஊர் பெரும பேசி நேரத்தை வீனடிக்காம… finland-ஐ தரிசிக்க ஊருக்குள்ல இறங்கி கால் தடத்தை பதிக்க ஆரம்பிக்கலாம் வாங்க..

ஊருக்குள்ள நுழைஞ்சதும் நாம முதல்ல போன இடம் Helsinki சிட்டியில இருக்க Suomenlinna fortress...

கழுகு பார்வையில இருந்து பார்க்கும்போது ஸ்டார் ஷேப்ல.... கடற்கரைய ஒட்டி பிரம்மாண்டமா இருக்க இந்த கோட்டை ...18ஆம் நூற்றாண்டுகள்ள கட்டிருக்காங்க…

இரண்டாம் உலகப்போர் அப்போ... போர் வீரர்கள் மறைவிடமா இருந்த இந்த கோட்டை... இப்போ சுற்றுல்லாவாசிகளோட டூரிஸ்ட் ஸ்பாட்டா மாறிடுச்சு…

ரொம்ப வரலாறா பேசுனா... நம்ம ஹிஸ்ட்ரி மேம்ல நம்ம கண்ணுமுன்னாடி வந்து போவாங்க... அதுனால பேச்ச கம்மி பண்ணிட்டு... ஜாலியா கோட்டைய சுத்திப்பார்க்க ஆரம்பிக்கலாம் வாங்க…

September to march மாசத்துல மட்டும்... Rovaniemi, Lapland பகுதிகள்ள இருக்க வானத்தை பார்க்குறதுக்காக ஏராளமான சுற்றுல்லாவாசிகள்... வண்டிகட்டி வருவாங்களாம்... அதுக்கு காரணம் வானத்துல தெரியுற பச்சை கலர் வெளிச்சம் தான்...

அதெப்டி திமிங்கலம்... புளூ கலர் வானம் க்ரீன் கலர்ல தெரியுதுனு... இங்க இருக்க மக்கள் கிட்ட கேட்டபோ... அதுக்கு காரணம் பூமிக்கு வெளியில இருக்க electrons protons... பூமியோட மேல் பரப்புல படும்போது பச்சை நிற ஒளிய வெளியிடுமாம்… அதுனாலதான் finland நாட்டுல ஒரு சில இடங்கள்ள Aurora-ன்னு சொல்லப்படுற Northen lights - அ... வானத்துல பார்க்க முடியுது...

கிருஸ்துமஸ் தாத்தான்னா... யாருக்குதாங்க பிடிக்காது… அப்டி குழந்தைங்க,பெரியவங்க மனசுல இடம்பிடிச்ச கிருஸ்துமஸ் தாத்தா பேருலயே Santa claus village-ன்னு Rovaniemi நகரத்துல ஒரு அழகான கிராமத்தையே உருவாக்கிருக்காங்க…

பனியால சூழ்ந்த இந்த இடத்துக்கு இப்படி ஒரு பேர் வச்சதுக்கு காரணம்… ஒருகாலத்துல கிருஸ்துமஸ் தாத்தா இங்க வாழ்ந்ததா finland மக்கள் மனசுல ஒரு நம்பிக்கை இருக்கு.. அந்த நம்பிக்கைய காப்பாததான் கிரித்துமஸ் தாத்தா பேரையே இந்த கிராமத்துக்கும் வச்சதா சொல்றாங்க…

சரி வந்ததும் வந்துட்டோம்… அப்டியே Lapland-ல ஐஸ்கட்டியால உருவாக்கப்பட்ட ஹோட்டலுக்கு போயிட்டு வரலாம் வாங்க…

இந்த குளு குளு ஓட்டலுக்கு... சாப்புட வரவங்கள விட வேடிக்கை பாக்க வரவங்கதான் அதிகமே... ஏனா உள்ள நுழைஞ்சதுமே பனிகட்டில செதுக்குன ராட்சத பல்லி... பிரம்மாண்ட சிலந்தி உருவங்கள்ளாம் நம்மள அப்படியே ஆச்சரியபட வைக்குது…

நாமலும் இதுவரைக்கும் பல வெரைட்டியான church-கள சுத்திப்பார்த்திருப்போம்… ஆனா பாரைக்குள்ள சர்ச் இருந்து பாத்துருக்கீங்களா… அப்படி ஒரு இடம் தான்.... Temppeliaukio Rock Church

மேல இருந்து பார்க்கும்போது கண்ணாடியால டெகிரேட் பண்ணியிருந்தாலும் உள்ள நுழைஞ்சு பார்த்தப்போதான் அங்கிருந்த காட்சி நம்மள அப்படியே ஆச்சரியப்பட வச்சுது… சுத்தி பாறை சூழ்ந்த சுவர்கள் , ஆடம்பரமில்லாத எளிமைன்னு இந்த தேவாலயத்தோட தோற்றம் இருக்குறதுனால மனசுக்கு அமைதிய கொடுக்கும்னு... சொல்லுறாங்க...

பொதுவா பார்க்னாலே... சர்க்கஸ், சீசா, ஊஞ்சல்ன்னு ரிலாக்ஸ் பண்றதுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கும்... ஆனா... parikkala sculpture park-ல நம்மள பயமுறுத்துற மாதிரி கொடூறமான மனித உருவங்களை வச்சிருக்காங்க…

Salsa dance , exercise-னு இங்கிருக்க ஒவ்வொரு உருவங்களும் ஒவ்வொரு கதைகள சொல்லுது… இந்த சிலைகள் தூரத்துல இருந்து பார்க்க அழகா இருந்தாலும்… குலோஸ்ப்ல பார்க்கும்போது லைட்டா பீதியாகுது…

போதும் போதும்ன்னு... சொல்ற அளவுக்கு ஒட்டுமொத்த நாட்டையும் ஒரே அடியா சுத்திப்பார்தாச்சு… கடைசியா ஒரே ஒரு தட Linnanmaki amusement park-ல இருக்க... ரைடுல த்ரில்லிங்க ஜில் பண்ணிட்டு அப்படியே Sealife Helsinki -அ விசிட் அடிச்சுட்டு கிளம்பலாம்…

டூரிஸ்ட் ஸ்பாட்ட சுத்திப்பார்த்து செல்பி எடுத்த கையோட… அடுத்து Finland நடக்குற கலர்ஃபுல் திரிவிழாக்கள்ல கலந்துகிட்டு எஞ்சாய் பண்ணலாம் வாங்க…

ரோட்ல சும்மா நடந்துபோகுற அழகான பொண்ணுங்கள… வில்லன் ஃபாலோ பண்ணி... கடத்திட்டுபோற சீனை சினிமாக்கள்லயும்... சீரியல்லையும் பார்த்திருப்போம்…

ஆனா இந்த சம்பவத்தை... ரியல் சம்பவம் மாதிரி... World Wife Carrying Championship-ன்னு சொல்லி... நம்ம finland மக்கள் பாரம்பரிய ஒரு திருவிழாவ கொண்டாடிட்டுவராங்க…

சரி கட்டுன மணைவி இருக்குறதுனால... கட்டி அணைச்சு தூக்கிட்டு போயிட்டீங்க... மனைவி இல்லாதவங்க என்ன பண்ணுவாங்கனு கேட்டா... அவங்களோட girl friend -அ அலேக்கா தூக்கி சாகசம் செஞ்சுட்டே ஓடனுமாம்… இப்டி யாரு எல்லா தடைகளையும் தாண்டி மனைவிய கீழபோடாம எல்லை கோட்ட தொடுறாங்களோ... அவங்கதான் நம்ம போட்டியோட வெற்றியாளர்… என்ன ஒன்னு குடும்ப தலைவர்களோட நிலமைய நினச்சாதான் கொஞ்சம் பாவமா இருக்கு…

நாமலான் நம்மளோட phone-அ தெரியாம கீழ போட்டுட்டாலே… உயிரே போனமாதிரி பீல் பண்ணுவோம்… ஆனா நம்ம finland-காரங்க மொபைல் phone-அ தூக்கிபோட்டு Mobile Phone Throwing-ன்னு ஒரு வினோத திருவிழாவ கொண்டாடுறாங்க…

அதாவது நாளுக்கு நாள் மொபைல் போனோட எண்ணிக்கை அதிகரிச்சுட்டு வரதால... பழைய மொபைல்ல குப்பைல தூக்கிபோடாம recycle செஞ்சு யூஸ் பண்ணனும்ன்னு மக்கள்கிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்ததான் இப்படி ஒரு திருவிழாவ கொண்டாடுறாங்களாம்…

Recycle பண்ணனும்ன்னு சொல்றது ஒகே… அதுக்கு ஏன்யா நல்லா இருக்க போனை தூக்கிபோட்டு உடைக்குறீங்கனு கேட்டா… யாரு இந்த போட்டில ரொம்ப தூரம் போனை தூக்கி போடுறாங்களோ... அவங்களுக்கு பரிசு பொருள் குடுப்பாங்களாம்…

சரி... சரி... செல்போன் திருவிழாவுல மெய்மறந்து உங்க கையில இருந்த போனை தூக்கிபோட்றாதீங்க… இடத்தை காலிபண்ணிட்டு அடுத்து நாம finland beer floating திருவிழாவுக்கு போகலாம் வாங்க…

பியர்ன்னு சொன்னதும் பியர்ல மிதக்கபோறோம்ன்னு மனசுக்குல்ல அவசரப்பட்டு ஆசைய வளர்த்துக்காதீங்க… ஏன்னா நாம இப்போ Keravanjoki ஆற்று படகுல மிதக்கப்போறோம்

அதாவது வருஷத்துல ஒருநாள் கொண்டாடப்படுற இந்த திருவிழாவுல... சிட்டில வாழ்ற மக்கள் எல்லாரும்... தங்களோட குடும்பத்தோட கிளம்பிவந்து ஆத்துல ஜாலியா படகு சவாரி செஞ்சு எஞ்சாய் பண்ணுவாங்களாம்…

அதுவும் காத்து அடிச்ச பலூன் படகுல... டிராவல் பண்ணனுங்கறதுதான் இந்த திருவிழாவோட முக்கியமான ரூலே…

Football-ன்னா நமக்கு முதல்ல … பறந்து பறந்து… சுழட்டி சுழட்டி… காலால பாலை உதச்சு நெட்டுக்குள்ள போடுற விளையாட்டுதான் நியாபகத்துக்கு வரும்…

சேற்றுக்குள் நடக்கும் ஃபுட்பால் போட்டி...

ஆனா இங்க Swamp football - ங்குற திருவிழாவுல சேத்துல football game நடத்துறாங்க… ஒருகாலத்துல ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுக்குறதுக்காக கண்டுபிடிச்ச இந்த போட்டி சம்மர் சீசன்ல மக்களோட பொழுதுபோக்கு திருவிழாவா மாறிடுச்சு… சரி வாங்க நாமளும் போட்டியில கலந்து சேத்துல புரண்டு விளையாடலாம்…

இவ்வளோ நேரம் நாம பார்த்த திருவிழாவவிட அடுத்து நாமபோகபோற திருவிழாவ நினச்சாதான் எனக்கு வெட்க வெட்கமா வருது… ஏன்னா நாம கலந்துக்கபோறது கட்டிபிடி திருவிழாவாம்…

கட்டிபுடி திருவிழானு சொன்னதும்... ஏதோ ஆணையோ.. பெண்ணையோ கட்டிப்புடிக்குறது இல்லங்க… சும்ம நிக்குற மரத்தை... ரொம்ப நேரம் கட்டிப்புடிக்குறதுதான் இந்த திருவிழாவோட ஸ்பெஷலே…

கட்டிப்பிடிக்கும் வினோத திருவிழா...

Finland ஓட நிலப்பரப்புல 75 சதவீதம் அடர்ந்த காடுகள்தான் இருக்காம்… அதுனால காடுகளை அழிக்காம மரங்களை பாதுகாக்கதான் Tree Hugging World Championships திருவிழாவ கொண்டாடுறாங்களாம்…அதுலயும் மரத்தை ரொம்ப நேரம் கட்டுப்புடிக்குறவங்களுக்கு அந்த வருடத்தின் சிறந்த கட்டிப்பிடிகாரர்ங்குற பட்டம் குடுப்பாங்கலாம்... சரி, நமக்கு தான் கட்டி பிடிக்க யாரும் இல்ல… இந்த மரத்தையாச்சும் கட்டி புடிச்சு.. இயற்கைய காப்பாத்துவோம்...

திருவிழாவுள... நாக்குதள்ள எஞ்சாய் பண்ணதும்... அடுத்து நம்ம மைண்டு சாப்பாட தேடி அலைய ஆரமிச்சுருச்சு… அதுனால இந்த ஊர்ல கண்ணுல படுற வெரைட்டியான உணவுகளை ஒரு கைப்பார்த்துட்டு வரலாம் வாங்க…

காலங்காத்தாலயே பொங்கல் வடை சாம்பார்ன்னு ஹெவியா சாப்பிடாம Strict diet follow பண்றவங்க… Leipajuusto-வ breakfast-ஆ சாப்பிடுங்க… வேறலெவல்ல இருக்கும்...

சாயங்கால சுடச்சுட டீயோட Ruisleipa bread சேர்த்து சாப்பிட்டோம்ன்னா போதும்… உலகத்த மறந்து… செவ்வாய் கிரகத்துக்கே போய்ட்டு வந்துருவோம்…

இதென்ன shape-ஏ வித்யாசமா இருக்குனு பாக்குறீங்களா… அதாவது Italy pizza-வுக்கு ஈக்குவலா டஃப் கொடுக்க நம்ம finland-காரங்க கண்டுபிடிச்சதுதான் Karjalanpiirakka…

நம்ம அம்மாகிட்ட மீன்கிடச்சா ஒன்னு வறுப்பாங்க.. இல்லனா குழம்புலபோட்டு மீன்குழம்பு வச்சிருவாங்க… ஆனா நம்ம finland-காரங்க பன்க்குள்ள மீன ஸ்டஃப் பண்ணி Kalakukko-னு புது ரெசிபியே கண்டுபிடிச்சிருக்காங்க…

முறுக்கை... கறக் மொரக்குனு கடிச்சுசாப்பிட நம்ம எல்லாருக்குமே பிடிக்கும்… அப்டி இந்த ஊருக்கு வந்துட்டு முறுக்கு சாப்பிடனும்ன்னு ஆசைவந்தா... முறுக்க தேடி அலையாம…மொறுமொறு பொறிஞ்சு கிடக்க Tippaleipa-அ வாங்கி சாப்பிடுங்க… நம்ம ஊர் முறுக்கு மாதிரி டேஸ்ட்டா இருக்கும்...

உணவு , அற்புதம் , அதிசயம்… இப்டி ஆச்சரியங்கள் நிறைந்த அசத்தலான நாடுன்னா நம்ம Finland-அ தவிர வேற என்ன இருக்க முடியும்… டைம் கிடைச்ச... ஒரு தடவை ட்ரை பண்ணிதான் பாருங்களேன்...

Tags:    

மேலும் செய்திகள்