"ஸ்கூல்ல இந்த கை தான அடிச்சது".. கேட்டு கேட்டு நடுரோட்டில் பள்ளி ஆசிரியரை தாக்கிய முன்னாள் மாணவன்
பெரம்பலூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் வாஞ்சிநாதன். இவர், சொந்த ஊர் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே நின்றிருந்த ஜேம்ஸ் பாண்டி என்ற இளைஞர், "10ம் வகுப்பு படிக்கும்போது என்னை ஏன் அடித்தாய்..?" எனக் கேட்டு, ஆசிரியர் வாஞ்சிநாதனை சாலையில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இது தொடர்பான விசாரணையில், அந்த இளைஞர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் மகன் என்பதும், தற்போது பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், கத்தியை காட்டி மிரட்டி ஆசிரியரை தாக்கிய வழக்கில் ஜேம்ஸ் பாண்டியை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.