கேரளாவை தொற்றிக்கொண்ட கால்பந்து ஜுரம்.. வீட்டையே மினி அர்ஜென்டினாவாக மாற்றிய ரசிகர்

Update: 2022-11-14 04:49 GMT

நவம்பர் 20ஆம் தேதி உலக கோப்பை கால்பந்து தொடர் தொடங்க உள்ள நிலையில், கேரளாவில் தற்போதே ரசிகர்களை தொற்றி கொண்டு விட்டது, கால்பந்து ஜுரம்.

கேரளாவை சார்ந்த கால்பந்து விளையாட்டு ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த கால்பந்து விளையாட்டு வீரர்களின் பல அடி உயரமுள்ள பிரம்மாண்ட கட்டவுட்களை அமைத்து, இணையத்தில் வைரலாகி வருகின்றனர். திருச்சூர் மாவட்டம் சாலக்குடி பகுதியை சேர்ந்த சகோதரர்களான பாசில் ,ஷான் மற்றும் யாசிப் என்பவர்கள் மரடோனாவின் விளையாட்டை பார்த்து 90களிலேயே அர்ஜென்டினா அணியின் தீவிர ரசிகர்கள் ஆகியுள்ளனர். இந்நிலையில், வருகிற 20ஆம் தேதி உலக கால்பந்து தொடர் தொடங்கவுள்ள நிலையில், அர்ஜென்டினா அணியின் ஜெர்சி கலரில் தங்கள் வீடு முழுவதும் அவர்கள் பெயிண்ட் அடித்து, தங்களது ஆதரவை வெளிப்படுத்தியிருப்பது, இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்