தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல், வடக்கு ஆந்திர கடலோரம், மத்தியமேற்கு, வடமேற்கு வங்கக்கடலிலும், தென் தமிழக கடலோரம், இலங்கை கடலோரத்தை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தென் கிழக்கு வங்கக் கடலிலும் மற்றும் லட்சத்தீவு, கேரள கர்நாடக கடலோரத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.