படகு அருகே காண்பித்த செல்போன் சிக்னல்.. விரைந்து சென்ற போலீசுக்கு நேர்ந்த துயரம் - வெளியான பரபரப்பு பின்னனி

Update: 2023-05-09 15:10 GMT

கேரளா படகு விபத்தில், போதைப்பொருள் கடத்தல் வழக்கு சம்பந்தமாக பிரதியைத் தேடிச் சென்ற காவலரும் உயிரிழந்தார்.

மலப்புறம் மாவட்டத்திற்கு உட்பட்ட தானூர் பகுதியில் நடைபெற்ற படகு விபத்து நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரையிலான 22 பேர் உயிரிழந்த இச்சம்பவத்தில் போலீஸ்காரர் ஒருவரும் உயிரிழந்தார். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஒருவரை தேடிச் சென்ற பரப்பனங்காடி பகுதியைச் சேர்ந்த தனிப்படை காவலர் சபருதீன், தன் பணிக்கிடையே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படகு நின்று கொண்டிருந்த பகுதியில் அந்த நபரின் செல்போன் டவர் சிக்னல் காட்டியதால், படகில் ஏறிய நபர்களில் அவர் இருக்கிறாரா என்பதை ரகசியமாக கண்காணிப்பதற்காக அவர் அந்த படகில் ஏறியதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்