விளாத்திகுளம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். காரைக்குடியை சேர்ந்த கார்த்திக் என்பவர், தனது மனைவி சுவாதி மகன் சித்தார்த்துடன், திருச்செந்தூருக்கு சென்றுவிட்டு காரில் சொந்த ஊர் திரும்பினார். விளாத்திகுளம் அருகே கீழேஈரால் பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்தை கார், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்ற 2 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.