தேர்தலில் போட்டியிட வாக்காளர்களிடம் பணம் வாங்கிய வேட்பாளர்" - தேர்தலில் விசித்திர சம்பவம்
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை பார்த்திருப்போம் ஆனால் கர்நாடகாவில் ஒரு வேட்பாளர், தேர்தலில் போட்டியிட வாக்காளர்களிடம் பணம் வாங்கிய ருசிகர சம்பவம் நடந்தேறி இருக்கிறது.யாதகிரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரான யாங்கப்பா என்பவர் அத்தொகுதி வாக்காளர்களிடம் இருந்து 1 ரூபாய் நாணயங்களாக சேகரித்து 10 ஆயிரம் திரட்டியுள்ளார். அந்த பணத்தை வைத்து வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான டெபாசிட் தொகையை கட்டியுள்ளார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய யாங்கப்பா, தான் வெற்றி பெற்றால் தனது வாழ்வை தன்னுடைய சமூகத்தினருக்கும், கிராமவாசிகளுக்கும் அர்ப்பணிப்பேன் என்றும் சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளை மக்களிடையே பரப்புவேன் என்றும் கூறினார்.