தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள கடல் பகுதியில், இறந்த நிலையில் மிதந்த பச்சிளம் குழந்தையை போலீசார் மீட்டனர். பின்னர் பச்சிளம் குழந்தையின் உடல், பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.