மொட்டை மாடியில் நண்பர்களுடன் விளையாடிய 9 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி

Update: 2023-05-07 03:39 GMT

தூத்துக்குடி, பொன்னகரம் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகனான 9 வயது சிறுவன் விஷ்ணு வரதன், வீட்டின் மொட்டை மாடியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இதில், எதிர்பாரதவிதமாக மாடியில் இருந்த மின்சார வயரை சிறுவன் தொட்டதாக கூறப்படும் நிலையில், மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 9 வயது சிறுவன் நண்பர்களிடையே விளையாடிக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்