வறுமையிலும் சாதிக்க துடிக்கும் 60-வயது வீரர் - பதக்கங்களை குவித்து சாதனை
கவுந்தப்பாடி புதூர் பகுதியை சேர்ந்த சண்முகம், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக விசைத்தறி பட்டறையில் கூலி வேலை செய்து வருகிறார். மனைவி, ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். சிறுவயதில் இருந்தே விளையாட்டு மீதான ஆர்வம் காரணமாக கபடி விளையாடி வந்துள்ளார். கொரோனா காலத்தில் பொழுதுபோக்கிற்காக, ஊர் வாய்க்கால் கரைகள் மற்றும் விளையாட்டு மைதானத்தில் முதன்முறையாக ஓடத்தொடங்கினார் சண்முகம்.
இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற ஓட்டப் பந்தயத்தில் முதன்முறையாக பங்கேற்ற சண்முகம், அதில் 2 பதக்கங்களை வென்றார். இவரை ஊக்குவிக்கும் வகையில், நண்பர்கள் பண உதவியும், பழக்கடை வைத்துள்ள நண்பர், தினமும் இலவசமாக சத்தான பழங்களையும் வழங்கி வருகின்றனர். இதனால் சென்னை, ஓசூர், கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார் சண்முகம்.