செஸ் ஒலிம்பியாட்டை கலக்கும் 8 வயது சிறுமி..! பாசமாக அழைத்து பாராட்டிய முதல்வர் | MKStalin

Update: 2022-08-01 04:17 GMT

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் 3வது சுற்று ஆட்டத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.சென்னை மாமல்லபுரத்தில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் 3வது சுற்று ஆட்டத்தில் பங்கேற்று வீரர்கள் விளையாடியதை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள இளம் வயது வீராங்கனையான, பாலஸ்தீனம் நாட்டை சேர்ந்த 8 வயது சிறுமி ராண்டா சேடருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் உலகத் தரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அனைத்து தரப்புகளில் இருந்து குவியும் பாராட்டுகளால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக முதலமைச்சர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பன்னாட்டு செஸ் ஒலிம்பியாட்டின் வெற்றிக்காக அயராது பாடுபடுபவர்களை ஊக்கப்படுத்துவதற்காக நேரில் சென்று விளையாட்டு போட்டிகளை பார்வையிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்