Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-12-2022) | Morning Headlines | Thanthi TV
Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-12-2022) | Morning Headlines | Thanthi TV
சென்னையில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் தீவிர புயலாக மாறியது, மாண்டஸ்...வடக்கு, டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கை...
மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை 3 மணி வரை கரையை கடக்கிறது, மாண்டஸ் புயல்...மணிக்கு 65 முதல் 85 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என எச்சரிக்கை...
சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...காசிமேடு துறைமுகத்தில் 1500 விசைப்படகுகள், 7000க்கும் அதிகமான நாட்டுப் படகுகள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைப்பு...
புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்...அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தல்...
புயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...சிவகங்கை, விழுப்புரம், வேலூர், கடலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிப்பு...
தஞ்சாவூர், அரியலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருவாரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருச்சி, நாகை மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிப்பு...
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று விடுமுறை கிடையாது...மதுரை, திண்டுக்கல், கோவை, கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி, திருப்பூர், குமரி, தேனி, தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வழக்கம்போல இன்று பள்ளி, கல்லூரிகள் இயங்கும்..