வெறிநாய்கள் கடித்ததில் 68 ஆடுகள் உயிரிழப்பு...பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்த வெறிநாய்கள்

Update: 2023-02-12 17:29 GMT

ராமநாதபுரம் அருகே வெறிநாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்ததில், 68-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன. இருபதுக்கும் மேற்பட்ட ஆடுகள் காயம் அடைந்தன.

திருப்புல்லாணி அருகே உள்ள முடுக்குத் தரவை கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர், 200-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இன்று அதிகாலை பத்துக்கு மேற்பட்ட வெறிநாய்கள் பட்டிக்குள் புகுந்து, ஆடுகளை துடிக்க துடிக்க கடித்து குதறியுள்ளது. இதில் 68 ஆடுகள் உயிரிழந்தன.

இருபதுக்கும் மேற்பட்ட ஆடுகள் காயம் அடைந்தன. இதன் மதிப்பு 5 லட்ச ரூபாய் என தெரிவித்த அதன் உரிமையாளர் லட்சுமி, உயிரிழந்த ஆடுகளுக்கு அரசு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்