29 நிமிடத்தில் 63 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (20.06.2023)

Update: 2023-06-20 04:43 GMT

அமெரிக்க அதிபர் பைடனின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டார். நியு யார்க் நகரில் உள்ள ஐநா சபையின் தலைமையகத்தில் நடைபெற உள்ள சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதேபோல், வரும் 22 ஆம் தேதி அமெரிக்க அதிபர் பைடனை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதோடு, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்ற இருப்பது குறிப்பிடத்தக்கது.

தருமபுரி மாவட்டதை சேர்ந்த திமுக தொண்டர் சேதுநாதன் என்பவர், கலைஞர் கோட்ட திறப்பு விழாவுக்காக, 450 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்து திருவாரூரை வந்தடைந்தார். அப்போது அவர், சைக்கிளில் ஒலிபெருக்கி வைத்துக் கொண்டு, கழக பாடல்களை ஒலித்தபடி நின்று கொண்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது....

தமிழகத்தில் சிபிஐ விசாரணை நடத்த வழங்கப்பட்டிருந்த முன் அனுமதி நடைமுறையை திரும்பப் பெற்றதற்கான தகவல்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இனி சிபிஐ விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக, அரசிடம் முன் அனுமதியை பெற வேண்டும். அதன்பிறகே, விசாரணையை சிபிஐ மேற்கொள்ள முடியும் என்று அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2021ம் ஆண்டு மழைநீர் தேங்கிய இடங்களில் தற்போது நீர் தேங்கவில்லை என்று கூறினார். சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளில், தண்ணீர் தேங்காத வகையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்