கோவில்பட்டியில் கல்லூரி மாணவர் ஒருவரை கடத்தி சென்று தாக்கிய சம்பவத்தில் 6 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி அருகே தனியார் கல்லூரியில் தீபாவளி பண்டிகையில் பட்டாசுகளை கையாளும் முறைகள் குறித்து தீயணைப்பு துறையினர் சார்பில் விழிப்புணர்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் போது கல்லூரியில் பயிலும் மாணவன் அப்துலுக்கும் சக மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கலைந்து சென்ற மாணவர்கள், நேற்று மாலையில் அப்துலை கடத்தி சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து அப்துல் அளித்த புகாரின் அடிப்படையில் 6 மாணவர்களை கைது செய்த நிலையில், தலைமறைவான 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்