31 நிமிடத்தில் 52 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (22.06.2023)

Update: 2023-06-22 03:48 GMT

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நாளை அம்மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனகார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில், மக்களவை தேர்தலில் பாஜகவை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாக உள்ளது. தற்போதைய தலைமைச் செயலர் இறையன்பு, வரும் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே.பிரபாகர், சிவ்தாஸ் மீனா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இந்த 3 பேரில் சிவ்தாஸ் மீனாவே, தமிழக அரசின் அடுத்த தலைமைச்செயலராக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் மொத்தமுள்ள 5 ஆயிரத்து 329 மதுக்கடைகளில், 500 கடைள் இன்று முதல் மூடப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, தென் சென்னையில் 21 கடைகளும், வடக்கு மற்றும் மத்திய சென்னையில் தலா 20 கடைகளும் மூடப்பட உள்ளன. திண்டுக்கலில் 15 கடைகள், சிவகங்கையில் 14 கடைகள், ராமநாதபுரத்தில் 8 கடைகள், விருதுநகரில் 17 மதுக்கடைகளும் மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் 13 கடைகள், தூத்துக்குடியில் 16 கடைகள், குமரியில் 12 கடைகள், தேனியில் 9 கடைகள், சேலத்தில் 17 மதுக்கடைகள் மூடப்பட உள்ளன.

அதிமுகவை தங்கள் அடிமைக் கட்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே மத்திய பாஜக அரசின் நோக்கம் என்று மயிலாடுதுறையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடந்தது, ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். அதிமுக செய்ததை திமுக ஒருபோதும் செய்யாது என்று தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜகவின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக அஞ்சாது என்று கூறினார்..

Tags:    

மேலும் செய்திகள்