விழுப்புரம் மாவட்டம் குண்டலபுலியூரில் உள்ள, அன்பு ஜோதி ஆசிரமம் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுகுறித்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், ஆசிரமத்தை சேர்ந்த 25 பேர், கடலூர் அருகே தனியார் காப்பகத்தில் தங்கவைக்கப் பட்டிருந்தனர். கடந்த மாதம் இங்கிருந்து தப்பிச்சென்ற சிலர் அவர்களது வீடுகளில் பாதுகாப்பாக இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இந்நிலையில் நேற்று மீண்டும் 5 பேர் காப்பகத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் ஒருவர் மட்டும் புதுச்சேரி அருகே நேற்று மாலை பிடிபட்ட நிலையில், மீதமுள்ள 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.