14 நிமிடத்தில் 41 செய்திகள்... தந்தி மாலை எக்ஸ்பிரஸ் | (20.03.2023)

Update: 2023-03-20 14:08 GMT

புதுச்சேரியில் தொடர்ந்து காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

மூன்று மாதங்களுக்குள் ஆர்டிஐ இணைய தளங்களை உருவாக்க வேண்டும் என அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கட்டாயமாக பதிவு செய்வதற்கு விதிகளை உருவாக்க கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உரிய தகுதியின்றி மாற்று முறை மருத்துவத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்க எடுக்க வேண்டுமென காவல் கண்காணிப்பாளர்கள், ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர் அமளியால் தொடர்ந்து 6வது நாளாக நாடாளுமன்ற முடங்கியது....

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் சுப்ரமணியன் சுவாமி மீண்டும் முறையீடு செய்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் ஐஐடிகளில் 33 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சுகாதாரத்துறை ஆய்வில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை

அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்