ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி.. - மத்தியபிரதேசத்தில் பயங்கரம்
மத்தியபிரதேச மாநிலம், ஹார்டா மாவட்டத்தில், மரத்தின் மீது மோதிய கார் தீப்பற்றி எரிந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மரத்தின் மீது மோதிய நிலையில், காரை விட்டு வெளியே தப்பிக்க முடியாததால் இந்த சோகம் அரங்கேறியுள்ளது.
உயிரிழந்தவர்கள் அனைவரும் 25-30 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவித்துள்ள காவல்துறையினர் இவர்கள் அனைவரும் ஹார்டா மாவட்டத்திலுள்ள சார்கேடா கிராமத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.