மக்களை அச்சுறுத்திய ஆட்கொல்லி மக்னா யானை - யானையைப் பிடிக்க 4 கும்கி யானைகள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுப்பகுதிகளை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி மக்னா யானையைப் பிடிக்க வந்த கும்கி யானைக்கு மதம் பிடித்ததால் மாற்று யானை வரவழைக்கப்பட்டுள்ளது.பிஎம்2 என்ற மக்னா யானை உணவுக்காக 100க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துத் தரை மட்டமாக்கியதுடன், 2 பேரை தாக்கிக் கொன்றது. மக்னா யானையைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், வனத்துறைக்கு போக்கு காட்டி வருகின்றது. இதனிடையே, அந்த யானையைப் பிடிக்க விஜய், சுஜய், வசிம், சீனிவாசன் ஆகிய 4 கும்கி யானைகள் முதுமலையில் இருந்து வரவழைக்கப்பட்டன. பிஎம் 2 யானையைப் பிடிக்கும் பணியின் போது சீனிவாசன் என்ற கும்கி யானைக்கு மதம் பிடிக்கவே, அந்த யானை மீண்டும் முதுமலை யானைகள் காப்பகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, அதற்கு பதிலாக "கிருஷ்ணா" என்ற யானை அழைத்து வரப்பட்டுள்ளது.