ஒரே வாரத்தில் 4 கோடி பேர்..மீண்டும் பீதியை கிளப்பும் சீனா -அடுத்த மாதத்தில் உச்சம் | China

Update: 2023-05-26 04:07 GMT

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது, ஜூன் மாத இறுதிக்குள் உச்சத்தை அடையும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கடந்த 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2 ஆண்டுகள் உலகையே ஆட்டிப் படைத்த கொரோனா வைரஸின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இருப்பினும், அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து, தாக்கி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தோன்றிய இடமாக கருதப்படும் சீனாவில், ஏப்ரலில் இருந்து ஒமிக்ரான் XBB என்ற உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த அலை, இந்த மாத இறுதிக்குள், ஒரு வாரத்தில் 4 கோடி பேரைத் தாக்கும் என்றும், அடுத்த மாத இறுதியில் உச்சம் தொட்டு, ஒரு வாரத்தில் ஆறரை கோடி பேரைத் தாக்கும் என்றும் மருத்துவர்கள் கணித்துள்ளனர். இந்த புதிய அலையை எதிர்கொள்வதற்கு புதிய தடுப்பூசியுடன் சீனா தயாராகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்