3ம் வகுப்பு மாணவி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்..பரிசாக கிடைத்த பதில்..மகிழ்ச்சியில் மாணவி
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள வினைதீர்த்த நாடார்பட்டியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருபவர் ஆராதனா.
இவர் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், தங்கள் பள்ளியில் போதிய வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் இல்லை என்பதை குறிப்பிட்டிருந்தார்.
எனவே கூடுதல் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
சிறுமியின் இந்த கோரிக்கையை ஏற்று அரசுப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்ட சுமார் 35 லட்ச ரூபாய் ஒதுக்கி அறிவிப்பை வெளியிடுகிறேன் என முதல்வர் ஸ்டாலின் பெருமையுடன் தெரிவித்தார்.