- அன்பின் அடிப்படையில் விளையும் ஆன்மிகத்தை கொண்டு வர நினைக்கும் தமிழக ஆளுநரை தான் முழுமையாக ஆதரிப்பதாக தமிழருவி மணியன் தெருவித்துள்ளார்.
- தேசத்தின் வளர்ச்சியில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பங்கு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஆளுநர் ஆர்.என் ரவி, தன் வீடு உள்ளிட்ட அனைத்து இல்லங்களிலும் பெண்களுக்குத்தான் அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார்.
- ஆண்களை விட பெண்களுக்கு தலைமைப் பண்பு அதிகம் என்றும் அவர் கூறினார்.
- தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின்படி, மீன் வளத்தை பெருக்க, நாளை நள்ளிரவு முதல் ஜூன் 14ஆம் தேதி வரை, 61 நாட்களுக்கு மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடலூர் துறைமுகத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்தனர். இழுவை, விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க யாரும் செல்லக் கூடாது என்றும், நாளை நள்ளிரவுக்குள் கரைக்கு திரும்பாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
- மதுரையில் வணிகரை மிரட்டி 10 லட்ச ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் காவல் ஆய்வாளர் வசந்தியை பணி நீக்கம் செய்து டி.ஐ.ஜி. பொன்னி உத்தரவிட்டுள்ளார்.
- இந்த வழகிகில், ஜாமினில் வெளி வந்த வசந்தி, பாதிக்கப்பட்ட நபரை மிரட்டியதாக மீண்டும் புகாரளிக்கப்பட்டது.
- இதனை தொடர்ந்து அவருடைய ஜாமினை ரத்து செய்து சில வாரங்களுக்கு முன்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
- தற்போது அவரை பணி நீக்கம் செய்து மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக, அங்கு பயின்று வந்த இந்திய மருத்துவ மாணவர்களின் படிப்பு தடைப்பட்ட நிலையில், தற்போது அவர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்க முன்வந்துள்ளது,
- உக்ரைன் அரசு. உக்ரைன் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் தபரோவா, மூன்று நாள் பயணமாக இந்தியா வருகை தந்த நிலையில், உக்ரைனில் மருத்துவ படிப்பைத் தொடர முடியாமல் போன இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் நாட்டில் ஒருங்கிணைந்த தகுதித்தேர்வினை எழுதுவதற்கு உக்ரைன் அனுமதிக்கும் என தெரிவித்துள்ளார்.