கள்ளக்குறிச்சியில் கைக்குழந்தையுடன் 3பேர் கழுத்தறுத்து கொலை..சித்தியே செய்த பயங்கரம்..பரபரப்பு வாக்குமூலம்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் நரிமேடு பகுதியில் பெண், அவரது 8 மாத கைக்குழந்தை,11 வயது சிறுவன் என 3 பேர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இறந்த பெண்ணின் சித்தி உட்பட 5 பேர் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. சொத்து பிரச்சனை மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரும், கொலையை செய்தது பற்றி போலீசாருக்கு நேரில் விளக்கினர்.