ஆந்திர மாநிலம் இஸ்ரோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஆன இஸ்ரோ அமைந்துள்ளது. அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காவலர் விகாஸ் சிங் என்பவர் தன் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டும், சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சிந்தாமணி என்பவர் தூக்கிட்டும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், உயிரிழந்த விகாஸ் சிங்கின் உடலை பெற்று கொள்ள பீகாரில் இருந்து அவரின் மனைவி இஸ்ரோ வந்துள்ளார். இஸ்ரோ வளாகத்தினுள் உள்ள விடுதியில் தங்கியிருந்த அவர், அறையினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இஸ்ரோ வளாகத்தினுள் தொடர்ச்சியாக 3 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனார்