- பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் உயிரிழந்த சேலம் மாவட்டம் பனங்காட்டை சேர்ந்த கமலேஷின் உடல் விமானம் மூலம் கோவை கொண்டு வரப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
- பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸில் சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டது.
- அப்போது, உயிரிழந்த ராணுவ வீரர் கமலேஷ்க்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்று கூறி, ஆம்புலன்ஸ் முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- அசாம் மாநிலம் சென்ற பிரதமர் பிரதமர் மோடி, ஆயிரத்து 120 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கவுகாத்தி எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார்.
- மேலும் நல்பாரி, நல்காவோன், கோக்ரஜார் ஆகிய இடங்களில் மூன்று மருத்துவ கல்லூரிகளையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
- கடந்த 9 ஆண்டுகளில் மருத்துவ உட்கட்டமைப்பு மற்றும் மருத்துவ பணியாளர்கள் அதிகரிப்பதை நோக்கி பணியாற்றியதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
- கோவாவில் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக பதியப்பட்ட வழக்கின் விசாரணைக்கு, நேரில் செல்வேன் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
- கடந்த ஆண்டு நடைபெற்ற கோவா சட்டமன்ற தேர்தலின் பிரசாரத்தின்போது, ஆம் ஆத்மி கட்சியினரால் பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- இந்த வழக்கின் விசாரணைக்கு வரும் 27 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.