21 கிராம மக்களுக்கு அறுசுவை விருந்து...அமர்க்களப்படுத்திய ஆட்சியர், எம்.எல்.ஏ - வயிறார சாப்பிட்டு மனமாற பாராட்டிய மக்கள்
கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியத்தில் நடைபெற்ற "மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாமில்" கலந்து கொண்ட 21 கிராம மக்களுக்கும் அறுசுவை உணவுடன் விருந்தளித்து கோரிக்கை மனுக்கள் ஏற்கப்பட்டன. இடங்களில் மக்களை தேடி மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நடைபெற்றது. ஒரே நாளில் 21 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் இந்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத்மற்றும் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு முகாமைத் துவக்கி வைத்து, கிராம மக்களுக்கு அறுசுவை உணவுடன் விருந்தளித்து மனுக்களைப் பெற்றுக் கொண்டனர். மேலும்,கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட்டது.