2 கல்யாணம் பண்ணியும் குழந்தை இல்லை.. கேலி செய்து கிண்டலடித்த நண்பர்கள்.. அடுத்து நடந்த விபரீதம் - சென்னையில் அதிர்ச்சி

Update: 2023-04-27 08:20 GMT

சென்னையில், 2வது திருமணம் செய்தும் குழந்தை பிறக்கவில்லை என நண்பர்கள் கேலி செய்ததால் மனமுடைந்த நபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை கொளத்தூர் சிவசக்தி நகர் பகுதியைச் சேர்ந்த நெல்லை நாயகம், அயனாவரம் மனநல மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பத்மபிரியா. நெல்லை நாயகத்திற்கு ஏற்கனவே மஞ்சுளா என்பவருடன் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லாததால் விவாகரத்து பெற்றார். அதேபோல், பத்மபிரியா, ஆனந்தன் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், குடும்ப பிரச்னையால் விவாகரத்து பெற்று, நெல்லை நாயகத்தை திருமணம் செய்தார். இந்நிலையில், 2-வது திருமணம் செய்தும் குழந்தை பிறக்காததால், நெல்லை நாயகத்தை அவரது நண்பர்கள் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மதுப்பழக்கத்திற்கு அடிமையான நெல்லைநாயகம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கேலி செய்த நண்பர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்