மன்னார் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 85 கிலோ கேரள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் என கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்ததுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.