150 ரயில்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதா? - இந்திய ரயில்வே பரபரப்பு விளக்கம்
150 பயணிகள் ரயில்கள், தனியார் வசம் ஒப்படைக்கப்படவுள்ளதாக வெளியான தகவலை இந்திய ரயில்வே மறுத்துள்ளது.
பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் 150 பயணிகள் ரயில்களை, பராமரிப்பு மற்றும் இயக்கப் பணிகளுக்காக இந்திய ரயில்வே, தனியார் வசம் ஒப்படைக்க போவதாகவும், அதற்காக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டிருப்பதாகவும், அவ்வாறு ஒப்படைக்கப்படும் ரயில்களுக்கு தனியார் அமைப்பினரே கட்டணம் நிர்ணயிப்பார்கள் எனவும் தகவல் வெளியானது.
இந்தநிலையில் இந்திய ரயில்வே இத்தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பயணிகள் ரயில்களை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து எந்த ஒரு பரிசீலனையும் தற்போது இல்லை என இந்திய ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.