தீக்குளித்த 15 வயது சிறுமி... குழந்தை திருமணம் தான் காரணமா? திருப்பத்தூரில் பரபரப்பு

Update: 2023-03-13 10:51 GMT

ஆம்பூர் அடுத்த கொல்லம்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி மணிகண்டன். இவர் தந்தையை இழந்த 15 வயது சிறுமியை, கடந்த வருடம் குழந்தை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த சமூக நலத்துறை அதிகாரிகள் சிறுமியை மீட்டு மீண்டும் பள்ளியில் படிக்க வைத்துள்ளனர். இந்நிலையில், பள்ளிக்கு சென்று கொண்டிருந்த சிறுமி, திடீரென இரவு வீட்டில் இருந்து தீப்பற்றி எரிந்த நிலையில் ஓடி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், அக்கம்பக்கத்தினர் சிறுமி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிறுமி தற்கொலைக்கு முயன்றாரா?... இல்லை வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்