12.36 கோடி பேரை 'கட்டிப் போட்ட' இறுதிப்போட்டி... இந்திய வரலாற்றில் இதுதான் அதிகம்..!
சமீபத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இந்திய தொலைக்காட்சிகளில் அதிகம் பேர் பார்த்த டெஸ்ட் போட்டி என்ற சாதனையை படைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை ஐசிசி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை இந்தியாவில் மட்டும், 12 கோடியே 36 லட்சம் பேர் பார்த்துள்ளதாகவும், ஆயிரத்து 440 கோடி நிமிடங்கள் பார்வை நேரம் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.