இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-07-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

Update: 2024-07-02 18:29 GMT

உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் அருகே ரதிபன்பூரில் ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 122-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...

காயமடைந்த பலர், அருகில் உள்ள எட்டா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி...

----

உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் அருகே ஆன்மிக நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஆழ்ந்த இரங்கல்...

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாக எக்ஸ் தளத்தில் பதிவு...

----

உத்தரப் பிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கிய உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்..

தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு... காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பு...

----

உத்தரபிரதேச கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்...

இந்தியா கூட்டணி கட்சியினர் நிவாரண உதவிகள் வழங்க வலியுறுத்தல்...

----

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதிக்கு தேசிய பேரிடர் மருத்துவக் குழு அனுப்பி வைக்கப்படும்...

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கை...

---

மக்களவை நாளை வரை நடைபெறுவதாக இருந்த நிலையில் இன்றுடன் ஒத்திவைப்பு...

பிரதமரின் பதிலுரையை தொடர்ந்து ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு...

----

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலுரை...

சர்வாதிகாரத்தை நிறுத்து என மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி...

----

தொடர்ந்து மூன்றாவது முறையாக வாக்களித்து வெற்றி பெறுவது என்பது மிகப்பெரிய கௌரவம்...

10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து வெளிக்கொண்டு வந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்...

----

ஊழல்களை சிறிதும் சகித்துக் கொள்ளக் கூடாது என்பதுதான் எங்களது கொள்கை...

அதற்கு நாட்டு மக்கள் ஆசிகளை தங்களுக்கு வழங்கி உள்ளதாக பிரதமர் மோடி பேச்சு...

----

தாஜா அரசியல் இந்த தேசத்தையே சீரழித்துள்ளது... மதச்சார்பின்மைக்கு மக்கள் வாக்களித்து உள்ளதாக மோடி பேச்சு...

மணிப்பூருக்கு நீதி வழங்கு... நீதி வழங்கு... என எதிர்கட்சிகள் கடும் முழக்கம்...

----

நம்பிக்கையின்மை என்ற நிலையில் இருந்து இந்த தேசத்தை பாஜக அரசு வெளியே கொண்டு வந்தது...

சாத்தியமற்றது என்பதை எல்லாம் பாஜக

அரசு சாத்தியமாக்கியதாக பிரதமர் மோடி பெருமிதம்...


Tags:    

மேலும் செய்திகள்