இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (18-07-2023)

Update: 2023-07-18 17:50 GMT

நாட்டு மக்களின் கண்ணீரை துடைக்க பாஜகவை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்ற வேண்டும்...எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு பின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திட்டவட்டம்...

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை எதிர்க்க தைரியம் இருக்கிறதா? மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறைகூவல்...

11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது...மும்பை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேட்டி...

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது...இதனை சுட்டிக்காட்டும் விதமாகவே 'இந்தியா' பெயர் சூட்டப்பட்டதாக, ராகுல்காந்தி பேச்சு...

எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் எனத் தகவல்...தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு...

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய தேசிய மேம்பாட்டு ஒருங்கிணைப்பு கூட்டணி (INDIA) என பெயர் சூட்டப்படுவதாக அறிவிப்பு...பெங்களூரு ஆலோசனை கூட்டத்தில் முடிவு...

பெங்களூரிலிருந்து டெல்லி திரும்பிய சோனியா மற்றும் ராகுல் காந்தி பயணித்த விமானம் போபாலில் அவசரமாக தரையிறக்கம்...தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்...

தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு...ஹோட்டலின் வாசலில் நின்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர், எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சியினர்...

2014 மற்றும் 2019ம் ஆண்டுகளில் பாஜகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைத்த போதும் கூட்டணி அரசு அமைத்தோம்...2014க்கு முன்பு பிரதமரை காட்டிலும் உயர்ந்த கை இருந்ததாக மோடி சாடல்...

தேசிய ஜனநாயக கூட்டணி தனித்துவமானது... யாரையும் ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக கூட்டணி உருவாக்கப்படவில்லை...தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு...

டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆலோசனை...தமிழகத்தில் இருந்து அதிமுக, தமாகா, பாமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு...

அமைச்சர் பொன்முடியின் வங்கி கணக்கில் இருந்த 41.9 கோடி ரூபாய் வைப்பு நிதி முடக்கம்...அமலாக்கத்துறை நடவடிக்கை...

அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 7 இடங்களில் நடந்த சோதனையில் 81 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 13 லட்சம் பறிமுதல்...அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு...

அமைச்சர் பொன்முடியிடம், சுமார் 6 மணி நேரம் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை விசாரணை நிறைவு...சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், விசாரணை முடிந்து, மகனுடன் வீடு திரும்பினார் அமைச்சர் பொன்முடி... 

Tags:    

மேலும் செய்திகள்