இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (07-11-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை....
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர்ர் ஸ்டாலின் கடிதம்...
புதிதாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு...
வரும் 11-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக, அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்...
நான் அளித்த ஆதரவால்ஆட்சி காப்பாற்றப்பட்டது...
ஆனால், எனக்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை...
முதல்வர் பதவி தந்த சசிகலாவுக்கு துரோகமிழைத்தார் ஈபிஎஸ் என்றும் ஓபிஎஸ் குற்றச்சாட்டு...
கன்னியாகுமரியில் தேமுதிக பேரணியை தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு....
தேமுதிகவினர் சாலை மறியலால் பரபரப்பு...
10,11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு...
வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...
அடுத்த ஆண்டு மார்ச் 13ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கி, ஏப்ரல் 3ம் தேதி வரை நடக்கிறது...
8.8 லட்சம் பேர் தேர்வு எழுத இருப்பதாக தகவல்...
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும்...
5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 3 நீதிபதிகள் ஒன்று போல் தீர்ப்பு...
10 சதவீத இட ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரை தவிர்த்திருப்பது அரசியலமைப்பு சாசனத்தை மீறுகிறது....
உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் மாறுபட்ட தீர்ப்பு...