ஐக்கிய நாடுகளின் உலகத் தலைவர்கள் கூட்டம்.. அதிபர் காணொலி மூலம் உரையாற்ற இந்தியா உட்பட 101 நாடுகள் ஆதரவு!

Update: 2022-09-17 13:27 GMT

ஐக்கிய நாடுகளின் உலகத் தலைவர்கள் கூட்டத்தில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை, வீடியோ மூலம் உரையாற்ற அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனாவால் உலகத் தலைவர்கள், வீடியோ பதிவு மூலம் வருடாந்திர கூட்டத்தில் உரையாற்றினர். ஆனால், இந்த ஆண்டு அனைத்து நாட்டு தலைவர்களும் இந்த கூட்டத்தில் நேரில் பங்கேற்க எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்,

உக்ரைன் நாடு மீதான ரஷ்ய தாக்குதலால் அதிபர் ஜெலன்ஸ்கி, கூட்டத்தில் நேரில் பங்கேற்க முடியாததால், அவர் முன்பதிவு செய்யப்பட்ட வீடியோ மூலம் உரையாற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அனுமதித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்