1000 ஆண்டுகள் பழமையான பெருமாள் ஏரி.... ஏரி தூர்வாரும் பணிக்கு விவசாயிகள் நன்றி
கடலூர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் ஏரி 112 கோடியே 42 லட்சம் ரூபாய் நிதியில் தூரவாரப்பட்டு வருகிறது. கடலூரின் 2வது மிகப்பெரிய ஏரியாக இருக்கும் குறிஞ்சிப்பாடியின் பெருமாள் ஏரி 12ம் நூற்றாண்டில் சோழ மன்னனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஏரியால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் ஏரியை தூர் வார வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்காக 112 கோடியே 42 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியது. கடந்த மாதம் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஏரியை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் துரிதமாக நடைபெற்றும் ஏரியின் தூர்வாரும் பணிக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.