ஜிப்பா, பட்டு வேட்டியில் கலக்கலாக வந்த பிரதமர்! - பல்லாயிரக்கணக்கான மக்கள் உற்சாக வரவேற்பு
கேரள கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், பிரதமர் மோடி, ஜிப்பா, பட்டு வேட்டி அணிந்து கொச்சிக்கு வந்திருந்தார்.
இரண்டு நாள் பயணமாக கேரளாவுக்கு வந்துள்ள பிரதமர் மோடி, கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் கருடா கப்பற்படை தளத்தில் இருந்து, யுவம் நிகழ்ச்சி நடைபெறும் தேவரா பகுதியில் உள்ள கல்லூரிக்கு பேரணியாக சென்றார். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்ற அவரை, சாலையின் இரு புறமும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் உற்சாக வரவேற்றனர்.