குரூப்-4 விவகாரம்... TNPSC இன்று அவசர ஆலோசனை - முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?

Update: 2023-03-29 01:44 GMT
  • குரூப்-4 விவகாரம்... TNPSC இன்று அவசர ஆலோசனை - முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?
  • கடந்த வாரம் வெளியிடப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவுகள் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
  • சரியாக விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவில்லை என்றும் , தேர்வு எழுதிய பல லட்சம் பேருக்கு தேர்வு முடிவுகள் வரவில்லை என்றும் பரபரப்பு புகார்கள் எழுந்துள்ளன.
  • தமிழ் தேர்வில் தோல்வி காரணமாக 5 லட்சம் பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
  • முறைகேடுகள் காரணமாக குறிப்பிட்ட சில மையங்களில் அதிகம் பேர் தேர்வு பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று காலை சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது
  • . தற்காலிக தலைவர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
  • கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்