சபரிமல ையில் காணிக்கையாக பெற்ற நாணயங்களை எண்ணும் பணி, மீண்டும் தொடங்கியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் செலுத்திய காணிக்கை, 351 கோடியை தாண்டியுள்ளது.
இதனிடையே, நவம்பர் 16ம் தேதி நாணயங்களை எண்ணும் பணி தொடங்கிய நிலையில், சிறு இடைவேளைக்கு பின் மீண்டும் தொடங்கியுள்ளது.
இப்பணியில் 520 ஊழியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், நாணயங்களை எண்ணி முடிக்க, இன்னும் ஒரு வாரம் ஆகும் என கூறப்படுகிறது.