- புதுச்சேரியில் வரும் மார்ச் 9-ந் தேதி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் தொடங்குகிறது.
- புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் 9 ம் தேதி காலை 9.45 மணிக்கு கூட உள்ளதாகவும், இதற்கான கோப்பிற்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
- ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் வரும் 9ந் தேதி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் துவங்கவுள்ளது. புதுச்சேரியில் கடந்த 12 ஆண்டுகளாக மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.
- அதற்கு பதிலாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. பட்ஜெட்டிற்கான திட்டக்குழு கூட்டத்தில் பட்ஜெட் தொகையாக 11 ஆயிரத்து 600 கோடி ரூபாய், நிர்ணயித்து மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இது கடந்த பட்ஜெட்டை விட ஆயிரம் கோடி ரூபாய் அதிகம் ஆகும்.